பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்

நமக்கே தாயும் தந்தையும் அல்லரோ? அன்பு இல்லாத விடத்து ஊடல் உண்டாவது எதற்கு” என்றாள் தலைவி.

119. இறந்திடு துயில் எழுப்பிய சேவலே குவி இணர்த் தோன்றி ஒண்பூ அன்ன தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்! நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகிக், கடு நவைப் படிஇயரோ, நீயே - நெடு நீர் யாணர் ஊரனொடு வதிந்த ஏம இன்துயில் எடுப்பியோயே.

- மதுரைக் கண்ணனார் குறு 107 “குவிந்த கொத்துக்களையுடைய செங்காந்தளினது ஒள்ளிய பூவைப் போன்று சிவந்த கொண்டையை உடைய மாட்சிமைப்பட்ட சேவலே ஆழமான நீரினால் உண்டாகும் புது வருவாயை உடைய ஊரனாகிய தலைவனோடு தங்கிய காலத்து இன்பத்தைத் தரும் இனிய் துயிலினின்றும் எம்மை எழுப்பினை. நீ செறிந்த இருளை உடைய இடை யாமத்தில் வீட்டிலுள்ள எலிகளை உண்ணும் பொருட்டு ஆராயும் காட்டுப் பூனையின் குட்டிக்குச் சில நாள் இட்டு வைத் துண்ணும் உணவாகி மிக்க துன்பத்தை அடைவாயாக!” என்று தலைவி கூறினாள்.

120. எருமண்ணைக் கொணர்வோம்

ஊர்க்கும் அணித்தே, பொய்கை, பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே; இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும் துன்னல் போகின்றால், பொழிலே, யாம் எம் கூழைக்கு எருமண் கொணர்கம் சேறும்; ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.

- மாதிர்த்தன் குறு 113 “தலைவா! பொய்கையோ ஊருக்கு அருகிலுள்ளது, சிறிய காட்டாறு அப் பொய்கைக்கு மிக அண்மையில் உள்ளது. அங்குள்ள சோலையோ பொய்கையிலும் ஆற்றிலும்