பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

127. இவர்கள் முயற்சி பயன்படாது

காண் இனி வாழி - தோழி, - யாணர்க்

கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட

மீன் வலை மாப் பட்டாஅங்கு,

இது மற்று - எவனோ, நொதுமலர்த்தலையே

’ - பூங்கனுத்திரையார் குறு 171

“தோழியே! இப்பொழுது பார்ப்பாயாக. புது வரு வாயாகிய மிக்க புனலையும் அடைந்த கரையையும் உடைய ஆழமான குளத்தின்கண் அமைந்த மீனுக்குரிய வலையின் கண் விலங்கு அகப்பட்டாற் போல அயலாரின் வரைவுக்குரிய இம் முயற்சி என்ன பயனுடைத்து” என்று தலைவி தோழி யிடம் கூறினாள்.

128. எவ்வாறு ஆற்றி இருந்தாரோ?

அயிரை பரந்த அம் தண் பழனத்து ஏந்து எழில் மலர தும்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள் இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனிர்; தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு அரியம் ஆகிய காலைப் i பெரிய தோன்றினிர் நோகோ யானே.

- நெடும்பல்லியத்தை குறு 178 “அயிரை மீன் மேய்தற்குப் பரந்த அழகிய குளிர்ந்த பொய்கையினிடத்து, அழகை உடைய மலர்களைக் கொண்ட உள்ளே துளையுடைய திரண்ட தண்டை உடைய ஆம் பலைப் பறிப்போர் புனல்வேட்கையை விரும்பினாற் போலத் தலைவியின் மார்பகங்களின் இடையே துயிலப் பெற்றும் நடுங்குதலை ஒளித்தீரல்லீர். எம் போன்ற கன்னிமகளிர் தொழுது காணும் மூன்றாம் பிறை போல வெளிப்பட்டு நுமக்குக் காண்பதற்கு அரியவர்களாக இருந்த களவு காலத்தில் பெரிய வருத்தங்களைப் பொறுத்து இருந்தீர் யான் அதனை நினைத்து வருந்துவேன்.” என்றாள் தோழி தலைவியிடம்.