பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

67


அணிமையிடத்தில் இருந்தும், முனிவருக்கு அருகில் வாழும் பகுதியினரைப் போல் மனத்தால் நீங்கி ஒழுகின்ற என் தலை வன் பொருட்டு முன்பு ஒரு காலத்தே பரிவுடையவளாக இருந்தேன். இப்பொழுது அது இல்லாதது ஆகிற்று” என்று, தலைவனுக்குத் துதாக வந்த தோழியிடம் தலைவி வருந்தி யுரைத்தாள்.

133. என்பால் அன்பில்லாதாயிற்று ஒர் ஊர் வாழினும் சேரி வாரார்; சேரி வரினும் ஆர முயங்கார்; எதிலாளர் சுடலை போலக் காணாக் கழிபமன்னே - நாண் அட்டு, நல் அறிவு இழந்த காமம் வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ குறு 231 “தோழி, தலைவர் நம்மோடு ஒர் ஊரிலே வாழ்ந்தா லும் நம் இல்லத்தினுள் வந்து நம்மை நன்றாகத் தழுவிக் கொள்ளார் நாணத்தை அழித்துத் தக்கது. இது, தகாதது இது என்று ஆராய்ந்தறியும் நல்லறிவை இழக்கச் செய்யும் காமமானது, வில்லினின்று புறப்பட்ட விட்ட அம்பைப் போலச் சென்று அகன்ற தொலைவிடத்தே, அழியும்படி, அயலாருடைய சுடு காட்டை வெறுத்து ஒதுங்குதல் போல நம்மைக் கண்டும் வெறுத்து ஒதுங்கிச் செல்வார்” என்றாள் தலைவி.

134. சூளுரையைத் திரும்பப் பெறுக! பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி, ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் தொண்டி அன்ன என் நலம் தந்து, கொண்டனை சென்மோ - மகிழ்ந நின் குளே.

- குன்றியன் குறு 238 “மகிழ்நனே! பச்சை அவலை இடித்த கரிய வயிரம் பொருந்திய உலக்கையை, அழகிய கதிரை உடைய நெற்