பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

69


தவப் பல் நாள் தோள் மயங்கி, ெேவளவும் பண்பின் நோய் ஆகின்றே.

- அழிசி நச்சாத்தனார் குறு 271 “தோழி! அருவியை ஒத்த பருமையான துளிகளைச் சிதறி மழை பெய்தமையால் ஆற்று வெள்ளம் நிரம்பப் பெற்று ஒலிக்கும் நாட்டை உடைய தலைவனைத் தெளிந்து அவனோடு பொருந்திய காலம் ஒரு நாளேயாகும். அங்ஙனம் பொருந்தியது, மிகப் பல நாள்கள் தோளோடு கலந்த அழகைக் கொள்ளைக் கொள்ளும் தன்னையுடைய நோயாக ஆகின்றது.” என்றாள் தலைவனுக்கு உட்பட்டுத் துதாக வந்த தோழியிடம் தலைவி.

137. பரத்தை கொண்டு செல்வாள்! கள்ளின் கேளிர் ஆத்திய, உள்ளூர்ப் பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய் ஒங்கு இரும் பெண்ணை நூங்கொடு பெயரும் ஆதி அருமன் மூதூர் அன்ன, அய வெள்ளம்பல் அம் பகை நெறித் தழை தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்பூ வருமே சேயிழை, அந்தில் கொழுநற் காணிய அளியேன் யானே!

- கள்ளில் ஆத்திரையன் குறு 293 “தோழியே கள்ளைக் குடிக்கும் விருப்பத்தை உடையவர் களது பயணம் ஊரகத்துள்ள பாளையினால் ஈனப்பட்டதும் நாரையுடையதும் ஆகும் குறிய காய்களைக் கொண்ட உயர்ந்த கரிய பனையினது நுங்கைக் கைக்கொண்டு மீள்வ தற்கு இடமாகிய ஆதி அருமனுக்குரிய பழைய ஊரைப் போன்ற, நீரில் வளர்ந்த வெள்ளாம்பலினது அழகிய மாறு பட்ட முழுநெறியை உடைய தழையாடை தேமலை உடைய தொடையின்கண் மாறி மாறி அசைய, பொன்னாற் செய்த, செவ்விய அணிகலன்களை, அணிந்த பரத்தை தலைவனைக் கானும் பொருட்டு வருவாள்; நான் இரங்கத் தக்கவள் ஆவேன். என்று தலைவி தூதாக வந்த தோழியிடம் கூறினாள். -