பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 .

தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

138. வாழ்வில் விழாக்காலம் வந்தது! உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும், தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி, விழவொடு வருதி, நீயே, இஃதோ ஒர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை பெருநலக் குறுமகள் வந்தென, இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே.

- துரங்கலோரி குறு 295 “உடையாக உடுத்துக் கொண்டும், மாலையாகத் தொடுத்

தணிந்தும். குழை முதலிய அணிகலன்களாக அணிந்தும், கூந்தலின் கண்ணேசெருகியும் தழை ஆடை அலங்காரத்தால் பொலிவு பெற்ற பரத்தையர் கூட்டத்தோடு நெருங்கி நீ, நீர் விழாவிற்குரிய அடையாளங்களோடு வந்துள்ளாய். இவ் வூரில் உள்ளார், ஒரு பக்வினால் வரும் ஊதியத்தைக் கொண்டு உணவை உண்ணுகின்ற செல்வச் சிறப்பில்லாத உன் வாழ்க்கையானது, மிக்க அழகுடைய இளைய தலைவி வாழ்க்கைப்பட்டு புக்கனளாக இப்பொழுது விழவை உடையா தாயிற்று என்று சொல்வர்” என்று தோழி தலைவனிடம் ‘சொன்னாள்.

139. துணையாளர் இலலையே

கண் தர வந்த காம ஒள் எரி என்பு உற நலியினும், அவரொடு பேணிச் சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே வந்து அஞர்களைதலை அவர் ஆற்றலரே உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் குப்பைக் கோழித் தனிப்போர் போல, விளிவாங்கு விளியின் அல்லது, களைவோர் இலை - யான் உற்ற நோயே.

  • - குப்பைக் கோழியார் குறு 305 “தலைவரைக் கண்ட விழிகள் தந்ததனால் உண்டாகிய

காமமாகிய ஒள்ளிய தீ, எலும்பையும் பொருந்தி வருத்தினும், அவர்பால் விரும்பிப் போய் அளவளாவதற்கு நாம் அரியரா