பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


மற்றொருவர் கண்ணோடு மாறுபடும்படி அத் துணங்கைக் கூத்தினிடத்து, அம் மகளிரை மணம் செய்து கொள்ளும் பொருட்டு, வீரர்களது சேரிப் போரானது விரும்பிக் கொள்ளப்படும்” என்று இற்பரத்தை வேறு ஒரு பரத்தைத் தன்னைப் புறங்கூறினாள் என்று அப்பரத்தைக்குப் பாங்கா யினார் கேட்கக் கூறினாள்.

145. மலையைக் கண்டேனும் ஆற்றிடுவாய் கொடியோர் நல்கார் ஆயினும், யாழ நின் தொடி விளங்கு இறைய தோள்கவின் பெlஇயர், உவக்காண் - தொழி - அவ் வந்திசினே - தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப் பூசல் ஆயம் புகன்று இழி அருவி மண்ணுறு மணியின் தொன்றும் தண் நறுந் துறுகல் ஒங்கிய மலையே.

- மதுரை மருதன் இளநாகன் குறு 367 “தோழியே! நெகிழ்ச்சியை உடைய பெரிய மழை பெய்யத் தொடங்குதலினால் அத் தலைவரது நாட்டி லுள்ள ஆரவாரத்தை உடைய மகளிர்த் திரள் விரும்பி நீராடும் பொருட்டுப் புகுகின்ற தண்ணிய நறிய அருவி யினால் கழுவப்பட்ட நீல மணியை போலத் தோன்றுகின்ற குண்டுக் கற்கள் உயர்ந்த மலையை உடைய தலைவர் தண்ணளி செய்யாராயினும், சந்துகளை உடைய வளைகள் விளங்கும் நின் தோள்கள் அழகு பெறும் வண்ணம் அங்கே வந்து பார்ப்பாயாக’ என்று தோழி தலைவிக்குக் கூறினாள்.

146. இனிது வாழ்வேன் மெல்லியலோயே! மெல்லியலோயே! நல் நாண் நீத்த பழி தீர் மாமை வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பின், சொல்ல கிற்றாம் மெல்லியலோயே! சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே, நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து இடிகரைப் பெரு மரம் போல, தீது இல் நிலைமை முயங்குகம் பலவே. - நக்கீரர் குறு 368