பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் * 81

நீர் உறு செறுவில் நாறு முடி அழுத்த, நிள் நடுநரொடு சேறிஆயின், இவண் சாயும் நெய்தலும் ஒம்புமதி, எம்மில் மாஇருங் கூந்தல் மடந்தை ஆய் வளைக் கூட்டும் அணியுமார் அவையே.

- துரங்கலோரியார் நற் 60 “மலை கண்டாற் போன்ற நிலைபொருந்திய உயரமுள்ள பெரிய பல நெற்கூடுகளையுடைய, எருமை பூட்டியுழும் உழவனே, நீ இரவில் கண்ணுறங்காது குளிர்ச்சியாய்ப் புலரும் விடியற் காலையிலே எழுந்து கரிய கண்ணையுடைய வரால் மீனின் பெரிய தசையைச் சமைத்த குழம்போடு சேர்த்து, உணவுக்குரிய அரிசியால் ஆக்கிய பொலிவுள்ள பெரிய சோற்றுத் திரள்களை விருப்பம் மிக்க கையால் மயக்கங் கொள்ள உண்டு, நீர் மிக்க வயலிலே நாற்று முடிகளை நடுவதற்காக உன் நடும் ஆள்களோடு சென்றால் அங்குள்ள கோரைகளையும் நெய்தல்களையும் களைந்து எறிந்து விடா மல் பாதுகாப்பாயாக. ஏனென்றால் அவை எம் இல்லத்தில் செறிக்கப்பட்ட கரிய பெரிய கூந்தலையுடைய மடந்தைக்கு அழகிய வளையல்களாகப் பூட்டிக் கொள்ளவும் தழை உடையாக அணிந்து கொள்ளவும் முறையே கோரையும் நெய்தலும் உதவும்” என உழவனுக்கு உரைத்தல் போல தலைவனுக்குத் தோழி இற்செறிப்பு உணர்த்தினாள்.

156. மறவாது சொல்வாய் சிறு வெள்ளங் குருகே சிறு வெள்ளாங் குருகே துறை போகு அறுவைத் துர மடி அன்ன நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி, அனைய அன்பினையோ, பெரு மறவியையோ - ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பர்க்கும் கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே?

- வெள்ளிவீதியார் நற் 70