பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 85

160. புன்னகையைக் காணலாம்!

தட மருப்பு எருமை மட நடைக் குழவி தூண் தொறும் யாத்த காண் தகு நல் இல், கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப, வாழை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇப், புகை உண்டு அமர்த்த கண்ணள், தகைபெறப் பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து, அட்டிலோளே; அம் மா அரிவை - எமக்கே வருகதில் விருந்தே - சிவப்பு ஆன்று, சிறு முள் எயிறு தோன்ற முறுவல் கொண்ட முகம் காண்கம்மே.

- மாங்குடி கிழார் நற் 120

“வளைந்த மருப்பையுடைய எருமையின் இளநடைக் கன்றுகள் தூண்கள் தோறும் கட்டப்பட்ட காணத் தகுந்த நல்ல இல்லம். வளைந்த குழை என்னும் காதணி அணிந்த காதலி அவ் வீட்டில் வாழ்கிறாள். சிறு கணையாழி அணிந்த மெல்லிய விரல் சிவக்கும்படியாக வாழை இலையின் பருத்த அடிக்காம்மைத் திறம்பட அரிந்து வகைப்படுத்திய பின் சமையல் செய்வதால் புகையுண்டு மாறுபட்ட கண்ணை யுடையவளாய் இருக்கிறாள். அழகான பிறை போன்ற அவள் துதலில் சிறிய நுண்ணிய பல வியர்வைத் துளிகள் தோன்று கின்றன. அவற்றை அழகிய சேலையின் முன்தானையால் துடைத்துக் கொள்கிறாள். நம்மைப் புலந்தாலும் அழகிய மாமை நிறத்தையுடைய அவள் விருந்தினர்க்காகச் சமையல் செய்கிறாள். இத்தகைய நிலையை ஏற்படுத்தும் விருந்து எமக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு வந்தால் நம்மைப் புலந்த அம் மகள் சினம் நீங்கி, சிறிய கூரிய பற்கள் தோன்றப் புன்முறுவல் கொள்வாள். அவள் முகத்தை நாம் காணப் பெறுவோம். அது எம் விருப்பம்” என்று விருந்து வாயிலாக புகுந்த தலைவன் சொன்னான்.