பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


பரத்தையிடமிருந்து மீண்ட தலைவன் தோழியின் துணையை நாட மறந்து மனிதப் பண்பை விளக்கிக் கூறினான்.

166. விரும்பத் தக்கவர் அவரே துணி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும், இனிதே, கானுநர்க் காண்புழி வாழ்தல்; கண்ணுறு விழுமம் கை போல் உதவி, நம் உறு துயரம் களையார் ஆயினும், இன்னாது அன்றே, அவர் இல் ஊரே, எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகு ஆர் துழனியின் இதனத்து ஆங்கண், ஏதிலாளன் கவலை கவற்ற, ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக் கேட்டோர் அனையர் ஆயினும், வேட்டோர்.அல்லது, பிறர் இன்னாரே.

- மதுரை மருதன் இளநாகனார் தற் 216 “வெறுப்புத் தீர்ந்த கூட்டத்திற்கு என் காதலர் என்னை நெருங்காராயினும், கண்டு மகிழத் தக்க அவரைக் காணு மிடத்து வாழ்க்கை இனிதாயுள்ளது. கண் அடைந்த துன் பத்தை நீக்கக் கை பயன்படுவது போல நாம் அடைந்த மனத் துன்பத்தை என் காதலர் நீக்காராயினும், அவர் இல்லாத ஊர் எனக்கு இனிமையற்றதாய் உள்ளது. தீப் போன்ற பூவுடைய வேங்கை மரத்தைத் தெய்வம் காக்குமிடத்தில், பறவை நிறைந்த வயலில் அமைந்துள்ள பரணின் பக்கத்தில் அயலான் ஒருவன் செய்த கொடுஞ் செயலால் மனக்கவலை மிகவும் வருத்த, ஒரு முலையை அறுத்த திருமாவுண்ணி என்பவள் துயரத்தைக் கேள்விப்பட்டோர், வருத்தம் அடைந்தனரா யினும், அவளை விரும்பியவர் ஒழிக மற்றவர் அவ்வளவு துன்பமடைந்திருக்க மாட்டார்” என்று பரத்தை தலைவனிடம் உள்ள பற்றார்வத்தை தோழியர் அறியக் கூறினாள்.

167. பரத்தையின் பக்கம் சேர்வாய்

முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை, கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,