பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ

யாரையோ? என்று இகந்து நின்றதுவே!

- மதுரை ஒலைக் கடையத்தார் நல்வெள்ளையார் நற் 250

“பாண, நகைப்போம், வருக. பிளந்த வாய் வழி பரல்கள் கிண்கிணி காலில் கிடந்து ஒலிப்பத் தெருவிலே வந்து சிறு தேர் உருட்டி நடை பழகிக் கொண்டிருந்த, தேன் போன்ற இனிய மொழிகளைப் பேசும் என் புதல்வனைக் கண்டேன். அவனைத் துக்கி என் மார்போடு அனைத்தேன். பூமணம் கமழும் அவனது சிவந்த வாய் நீராலே என் மார்புச் சந்தனம் சிதைந்தது. அச் சிதைவோடு என் வேட்கையுள்ள நெஞ்சம் துரண்டிச் செலுத்தியதால் யான் அவளைத் தழுவும் விருப்பத் தோடு குறுகினேன். அப்போது மூன்றாம் பிறைத் திங்கள் போன்ற அழகு பொருந்திய குற்றமற்ற சிறப்புடைய நெற்றியை யும் மணம் கமழும் கரிய கூந்தலையுமுடைய என் காதலி. வேறுபட நினைத்து அஞ்சிய மாண்பினை போல ஒதுங்கிச் சென்று, யாரையோ என்று சொல்லி அப்பால் சென்று நின்றாள். பரத்தையுடன் பயின்ற தலைவன் தலைவி ஏற்க மாட்டாள் என்றறிந்து தன் செல்வனுடன் செல்கையில் ‘நீர் யார் என்றுரைத்தாள்.

169. நான் மறக்கவில்லை

கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை பழனத் தாமரைப் பணிமலர் முனைஇத், தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர! வெய்யை போல முயங்குதி: முனை எழத் தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன் மலி புனல் வாயில் இருப்ப்ை அன்ன, என் ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த முகை அவிழ் கோதை வாட்டிய பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே!

- பரணர் தற். 260 “வலிமையான கால்களையுடைய எருமை கழுநீர் மலரைத் தின்று, பொய்கையிலுள்ள குளிர்ந்த தாமரை மலரை