பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 97

காவல் செறிய மாட்டி, ஆய்தொடி எழில் மா மேனி மகளிர் விழுமாந்தனர்,தம் கொழுநரைக் காத்தே. - கபிலர் நற் 320 “ஊரிலே திருவிழா முடிந்தது. முழவு ஒலிப்பதும் ஒழிந்தது. வேறு பரத்தை யாது குறித்தனள் என்றால் கூறுதும். அசையும் அல்குலில் தழையுடை யணிந்து தெருவில் அவ் இளையோள் சென்றாள். அதற்கே இவ் ஊரில் சலசலப்பு ஒலியுண்டாயிற்று. பழைய வெற்றியுடைய வல்வில் ஒசியைக் கொன்று, திருமுடிக் காரி புகுந்தபோது பகைவர் புலத்து ஒப்பற்ற பெருந் தெருவில் பேரிரைச்சல் ஏற்பட்டது. அவ் ஒலிபோல இவ் ஊரிலும் உண்டாயிற்று. அது கொண்டு ஆய்ந்த வளையையும் மாந்தளிர் போன்ற உடல் அழகினை யும் உடைய இல்லத்துப் பெண்கள் காவல் செறியச் செய்து தம் கணவன்மார்களைப் பாதுகாத்துச் சிறப்படைந்தனர்” என்று ஒரு பரத்தை, மற்றொரு பரத்தையிடம் செல்லும் தலைவனைப் பற்றி விறலியிடம் கூறினாள்.

175. புல்லிய மனத்தில் பண்பாடு ஏது? தட மருப்பு எருமைப் பினர்ச் சுவல் இரும் போத்து, மட நடை நாரைப் பல் இனம் இரிய, நெடு நீர்த் தண் கயம் துடுமெனப்பாய்ந்து, நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை எம் மனைத் தந்து நீ தழிஇயினும், அவர்தம் புன் மனத்து உண்மையோ அரிதே அவரும், பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, நன்றி சான்ற கற்போடு எம் பாடு ஆதல் அதனினும் அரிதே.

- ஆலங்குடி வங்கனார் நற் 330 “வளைந்த மருப்பையும் வலிய பிடரியையுமுடைய கரிய எருமைக் கடா, மடநடை நாரையும் பல கூட்டமும் பறந்தோட, நிரம்பிய நீருடைய குளிர்ந்த குளத்தில் துடும்’ எனப் பாய்ந்து தன் அன்றைய நாள் வருத்தத்தை நீக்கும்.