பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொள்ளும் பழக்கமே தமிழர்களுக்கு இல்லை போலும்’ என்பன போன்ற அரை வேக்காட்டு ஆய்வுகள் வெளிப்படவும் அதன் மூலம் தமிழரின் நாகரிகத்தை, பண்பாட்டை பாழ்படுத்தும் போக்கும் தலை தூக்க நேர்ந்திருக்காதல்லவா? மழித்தல், சிரைத்தல் போன்ற சொற்கள் சங்க காலந்தொட்டு வழக்கிலிருந்த போதிலும் அவற்றைப் பயன்படுத்தாதன் விளைவைத்தானே இந்நிலைமைகள் சுட்டிக்காட்டுகின்றன

‘மணிப்பிரவாள மனப்போக்குக் கொண்ட சில எழுத்தாள நண்பர்களிடமும் பேச்சாள அன்பர்களிடமும், "நீங்களும் தமிழர்; உங்கள் எழுத்தும் பேச்சும் தமிழ்; அவற்றைப் படிப்பவர்களும் கேட்பவர்களும் தமிழர்கள். பின் ஏன் உங்கள் எழுத்திலும் பேச்சிலும் பெருமளவில் பிறமொழிக் கலப்பு?” எனக் கேட்டால், “நாங்கள் வேண்டும் என்றே பிற மொழிகளைப் பயன்படுத்துவதில்லை. ஆங்கிலம் வாயிலாகக் கல்விகற்ற எங்களது எழுத்திலும் பேச்சிலும் ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்கள் சரளமாக வந்து விழுகின்றன. அவற்றிற்கான தமிழ் நேர்ச் சொற்கள் தெரியாததால்தான் தூய தமிழைப் பயன்படுத்த இயலாமற் போகிறது” எனச் சமாதானம் கூறுகின்றனர். இவர்கள் கூற்றிலும் உண்மை இல்லாமலில்லை. இத்தகையவர்களைக் கருத்தில் கொண்டே இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கில, சமஸ்கிருதச் சொற்களைக் கையாள நேரும்போது, அவற்றிற்கான நேர் தமிழ்ச் சொல்லை அறிந்து பயன்படுத்த அத்தகையவர்கட்கு இந்நூல் ஒரளவு துணையாயமையும் என்பதில் ஐயமில்லை.

அவ்வாறு கையாள எளிதாக இருக்கும் பொருட்டு இந்நூலில் பிற மொழிச் சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன.