பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பற்றிய அவரது ஆக்கமான சிந்தனைகள் என்னை வியப்பிலாழ்த்தும். அச்சான நிலையில் இந்நூலை ஒரே மூச்சில் கண்ணுற்று, தன் கருத்துணர்வுகளை எழுத்துருவில் வடித்துத் தந்துள்ளார். அவரது இனிய தமிழ் உள்ளத்திற்கு என் இதய நன்றியைப் புலப்படுத்திக் கொள்வதில் பெருமையும் பெருமிதமும் அடைகிறேன்.

இந்நூலுக்கு ‘வாழ்த்துரை' வழங்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மு. ஆனந்த கிருஷ்ணன் அவர்கள் மிகச்சிறந்த தமிழ் ஆர்வலர்: தமிழ் வளர்ச்சிக்குத் துணை நிற்பதில் பெருமகிழ்வு கொள்பவர். அறிவியல், தொழில்நுட்ப நூல்கள் அனைத்தும் அழகு தமிழில் வெளிவர வேண்டும் எனும் ஆர்வத் துடிப்பினர். இன்று கணினித் தமிழ் இயக்கத்தை ஆற்றலோடு வழி நடத்துபவர். அண்ணா பல்லைக்கழகம் தமிழில் வெளியிடும் அறிவியல் தொழில்நுட்ப நூல் வெளியீட்டு வல்லுநர் குழுவில் ஒருவனாக இடம் பெற்றுள்ள நான், அக்குழுக் கூட்டங்களில் கலந்துகெள்ளும்போது அவர் காட்டும் தமிழார்வமும் செயல் துடிப்பும் சில நேரங்களில் என்னை மலைக்கச் செய்யும். அன்னார் பல்வேறு இடையறா பணிகளுக்கிடையேயும் இந்நூலைப் படித்து வழங்கியுள்ள வாழ்த்துரை இந்நூலுக்கு மற்றொரு அணிகலனாக அமைந்துள்ளதெனலாம். அன்னார் அவர்கட்கு நான் என்றென்னும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

காலத்தின் இன்றியமையாத் தேவையைக் கருத்தில் கொண்டு உருவாகியுள்ள இம்மறுபதிப்பையும் எனது மற்றைய நூல்களைப் போன்றே தமிழுலகம் ஏற்று ஆதரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

அன்பன்
மணவை முஸ்தபா