பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்வமுள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் படிக்க வேண்டும். படித்து அழகு தமிழ்ச் சொற்களை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். நையாண்டி செய்பவர்கள் குரல் உரத்த தமிழ்க் குரலால் அடக்கப்பட வேண்டும். நம் இடையே ஊடுருவி, நம் இன, மொழிக்கு ஊறுதேடும் உலுத்தர்கள் இம்மொழிக்கு உயிர் உண்டு, உணர்வுண்டு, அழகுண்டு, ஆற்றலுண்டு என்பதினை நாம் அழகு தமிழை கையாளும் முறையிலிருந்து தெளிவு பெற வேண்டும்.

இந்நூலின் தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. தமிழை அன்றாட வாழ்வில் பயன்படாமல் அடக்கிய வேற்று மொழிப் பற்றுடையோர்க்குக் கொடுக்கப்பட்ட சவாலாக 'அன்றாட வாழ்வில் அழகு தமிழ்' நூல் அமைந்துள்ளது. “எந்தமிழில் இசைப்பாடல் இல்லையென செப்புகின்றீர் மானமின்றி” என்ற பாரதிதாசனின் பாடலுக்கு உரம் ஊட்டும் நூலிது. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” எனும் பாரதியின் பாடலுக்கு வளம் சேர்க்கும் நூல் இது. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் சொல்லையும் தேனினும் இனிய தமிழ் பாடிய மாணிக்க வாசகர் மொழியினையும் இவ்வையகம் உணர எடுத்து வைக்கப்பட்ட அழகு தமிழ் பெட்டகம் திரு. மணவை முஸ்தபாவின் “அன்றாட வாழ்வில் அழகு தமிழ்” நூல் . சிறப்பான தமிழ்மொழி தழைக்க, சிந்தையினை சிலிர்க்க வைக்கும் வண்ணம், இதில் காணும் அழகு தமிழ்ச் சொற்கள் அன்றாட வாழ்வில் பயனுக்கு வருவதாக! பன்னிரண்டு உயிரையும், பதினெட்டு மெய்யையும், வந்தடைந்த ஐந்து வட மொழி எழுத்துக்களையும் முறைப்படுத்தி அன்றாட வாழ்வில் இவ்வெழுத்துக்களின் வேற்று மொழி உச்சரிப்பை அழகு தமிழில் கண்ட திரு மணவை முஸ்தபாவின் முயற்சியை நான் மிகவும் பாராட்டுகிறேன். படிப்போர்கள் இதுவே முழுமை