இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
| அபூர்வம் | அரிய, அருமை |
| அபேட்சகர் | வேட்பாளர் |
| அபேட்சை | வேட்பு |
| அபிமானம் | நேயம் |
| அபேட்சா பத்திரம் | வேட்பு மனு |
| அம்பலம் | வெளிப்படை, அவை |
| அம்பாரம் | குவியல், களஞ்சியம் |
| அம்னிஷியா | மறதி நோய் |
| அமங்கலி | கைம்பெண் |
| அமர்க்களம் | போர்க்களம் |
| அமரத்துவம் | அழிவின்மை |
| அமரர் | விண்ணவர் |
| அமாவாசை | மதி மறைநாள் |
| அமானத்து | ஒப்படைத்த பொருள் |
| அமிர்தம் | அருமருந்து, அமிழ்தம், இனிமை, அமுதம் |
| அமிலம் | புளிப்பு நீர் |
| அமுல் | நடைமுறை |
| அமெச்சூர் | தொழில் சாரா கலைஞர் |
| அமெண்மென்ட் | திருத்தம் |