இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
| அலங்கம் | கொத்தளம் |
| அலங்காரம் | ஒப்பனை, புனைவு |
| அலங்கமலங்க | பொறி கலங்க |
| அலட்சியம் | புறக்கணிப்பு, நோக்கின்மை |
| அலர்ஜி | ஒவ்வாமை |
| அலவன்ஸ் | செலவுப்படி, படி, இசைவுத் தொகை |
| அலாட்மென்ட் | ஒதுக்கீடு |
| அலாரம் | எச்சரிக்கையொலி |
| அலர்ட் | விழிப்பான, எச்சரிக்கையான |
| அவகடம் | வஞ்சகம் |
| அவகாசம் | சமயம் |
| அவமானம் | மானக்கேடு |
| அவசியம் | தேவை |
| அவஸ்தை | தொல்லை |
| அவரோகணம் | இறக்கல் |
| அவலட்சணம் | அழகின்மை |
| அவகாசம் | ஒழிவு, ஒய்வு |
| அவகேடு | பெருந்தீங்கு |
| அவச் சொல் | இழி சொல் |
| அவசரம் | விரைவு |