இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
49
| உத்தரவு | | கட்டளை, ஆணை |
| உத்தமபுருஷன் | | சிறந்தவன் |
| உத்தேசித்தல் | | கருதுதல் |
| உத்வேகம் | | மனவெழுச்சி, மிகுவிரைவு |
| உதயம் | | தோற்றம் |
| உதயன் | | எழுகை |
| உதாரணம் | | சான்று, எடுத்துக்காட்டு |
| உதயசூரியன் | | கதிரவன், எழுஞாயிறு |
| உதரம் | | வயிறு |
| உதிரம் | | குருதி |
| உப்பசம், உப்பிசம் | | வயிறு ஊதல் |
| உப்பரிகை | | மேல்மாடம் |
| உபகரணம் | | துணைப்பொருள், கருவி |
| உபகாரம் | | உதவி, நன்றி |
| உபகாரி | | உதவி செய்வோன் |
| உபசரனை | | விருந்தோம்பல் |
| உபாத்தியாயர் | | ஆசிரியர் |