பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

உரையாடல்களைக் கொண்டு 'பேச்சுத் தமிழ்' பயிற்சி பெறலாம் என்று எண்ணிப் படிக்க முனைந்தால் அக்கதை மாந்தர்களின் உரையாடலும் ஆங்கில, வடமொழிக் கலப்பான தமிழிலேயே உரையாடுவதாக அமைகிறது. இன்னும், சில கதாசிரியர்கள் தங்கள் கதைகளில் வரும் பாத்திரங்களை ஆங்கிலத்திலேயே உரையாடும்படி அமைக்கின்றனர். அதனால் அந்த வாய்ப்பும் கூட இல்லாது போகிறது என்று கூறி வருந்தியது என் உள்ளத்தை நெடு நாட்களாக நெருடிக் கொண்டேயிருந்தது.

கணிசமான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயணம் செய்யும் போதெல்லாம் நான் பெறுகின்ற உணர்வு மேற்கூறிய மனப்போக்கை எதிரொலிப்பதாகவே இருந்தது.

நான் மலேசியா, சிங்கப்பூர் தமிழர் கூட்டங்களில் பங்கேற்கும் போதெல்லாம் அங்குள்ள தமிழார்வலர்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களைப்பற்றி ஒரு குறையைக் சுட்டிக் காட்டத் தவறுவதேயில்லை.

"தமிழ் நாட்டிற்கு வெளியே மலேசியத் தமிழர்களாக, சிங்கைத் தமிழர்களாக வாழும் நாங்கள் தமிழைத் தமிழாகவே பேசுகிறோம். எழுதுகிறோம். தேவையின்றி மலாய்ச் சொற்களையோ ஆங்கிலச் சொற்களையோ அல்லது வட மொழியையோ கலந்து பேசுவதில்லை. ஆனால், தமிழ் நாட்டுத் தமிழர்கள் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்றையும் கலந்தே பேசுகின்றனர். நல்ல தமிழில் பேசும் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பார்ப்பதும் பேசுவதும் மிகவும் அரிதாக உள்ளது.

"அது மட்டுமல்ல, அண்மைக்காலமாகத் தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் நாளிதழ்களும் வார, மாத