பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இதழ்களும் நூலுருவில் வெளி வரும் படைப்பிலக்கியங்களும் கலப்புத் தமிழைக் கொண்டதாகவேயுள்ளன. சில தருணங்களில் கதை மாந்தர் உரையாடல்களெல்லாமேகூட ஆங்கில மயமாகவே உள்ளது. இதன்மூலம் இந்தியத் தமிழர்கள் குறிப்பாகத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழை மறந்து வருகிறார்களா? அல்லது ஆங்கிலம், வடமொழித் துணையின்றித் தமிழால் இயங்க இயலாது எனக் கருதுகிறார்களா?” என வினாத் தொடுப்பதுண்டு. அப்போ தெல்லாம் அவர்களின் தமிழார்வத்தையும் பற்றையும் கண்டு பூரிக்கும் அதே வேளையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் நிலை கண்டு என் உள்ளம் கவலையால் கனத்துவிடும். அவர்கள் வினா பல உண்மைகளை உள்ளடக்கியுள்ளதென்பதில் சிறிதும் ஐயமில்லை.

அதிலும் அண்மைக்காலமாக வலுக்கட்டாயமாகத் தங்கள் எழுத்துக்களில் ஆங்கில, வடமொழிச் சொற்களை அளவுக்கதிகமாகக் கலந்து பேசுவதையும் எழுதுவதையும் பெருமையாகக் கருதும் மனநிலை ஓரளவு வளர்ந்து வருவதையும் மறுக்க முடியாது.

தூய தமிழ் போற்றிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. மறைமலையடிகள் போன்ற தமிழ்ச்சான்றோர்கள் ஊட்டி வளர்த்த தனித்தமிழ் ஆர்வமும் திராவிட இயக்கம் போற்றி வந்த தமிழ்ப்பற்றும் இன்று தேய்பிறையாக ஆகி வருவதை இன்றைய மேடைகளிலும் படைப்பிலக்கியங்களிலும் ஏன் புதுக்கவிதைகளிலும் காண முடிகிறது. புஷ்பம்’ என்ற சொல்லை "புட்பம் எனக் கூறுவதன் மூலம் தங்கள் தமிழார்வத்தை வெளிப்படுத்தும் போலித்தனம் காணப்படுகிறதே யன்றி 'மலர்' எனக்கூறும் உண்மைத் தமிழார்வம் நீர்த்துக் கொண்டு வருகிறது.