பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்மொழி போதிய சொல்வளமில்லாது இடர்ப் படுவது போன்ற உணர்வை உருவாக்கி, அதை நிறைவு செய்யும் வகையில் பிறமொழிச் சொற்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து சொல்வளமூட்டுவது போன்ற எண்ணத்தை ஏற்படுத்த முனைகின்றனர். இவர்தம் போக்கு "சொர்ணச் சுரங்கம் உன் மனையில் கரந்திருக்க, இன்னொருவர் வீட்டில் இரந்துண்ண போவாயோ? என்னே உன் ஏழமை!” என்று கவிஞரொருவர் வருந்திப் பாடிய பாடல் வரிகள் என் மனக்கண்முன் பளிச்சிடுகின்றன.

“உலக மொழிகளிலேயே மிக அதிகமான வேர்ச் சொற்களைக் கொண்ட"சொல் வளமுள்ள மொழி தமிழ்” என உலகப் பெரும் மொழியியல் அறிஞர் டாக்டர் எமினோ போன்றவர்கள் போற்றிய தமிழ் மொழியிலுள்ள சொல் வளப்பெருக்கை உணராது செயல்படும் இன்றையத் தமிழரின் போக்கு எள்ளி நகையாடுவதற்குரியதாக உள்ளது. ஒரு கால கட்டத்தில் தமிழர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ‘மணிப்பிரவாள” போக்கை மீண்டும் நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சியின் மறுவடிவோ இஃது என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

'கருத்தை உணர்த்தும் கருவிதானே மொழி. அதில் தூய்மையைக் காட்டிலும் கருத்துணர்த்தும் திறனுக்குத்தானே முதலிடம்' என்று சிலர் கூறலாம்.

'மொழியானது ஒரு இன மக்களின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை முழுமையாக வெளிப்படுத்தும் ஆடி போன்றது' என்பதை எப்போதுமே கருத்திற் கொள்ளுதல் அவசியம். 'க்ஷவரம்' போன்ற வடமொழி சொற்களை அதிகமாகக் கையாண்டதன் விளைவாக 'வடமொழி பேசிய மக்கள் தமிழகம் வருவதற்கு முன்னால் 'க்ஷவரம்' செய்து