94 O லா. ச. ராமாமிருதம்
வார்த்தைகள் என்னைத் துரத்துகின்றன. “மாமா ஒரு ஒரு சமயம் அப்படித்தான் இருப்பா- நீ ஒண்னும் தப்பா நினைச்சுக்காதே.”
இங்கு ஏன் வந்தேன்?
வரவர செயல்களில் நினைவு பொருந்தவில்லை. அல்ல. நினைவோடு செயல் பொருந்தவில்லை. எதுமுன் எதுபின் முரட்டுக் குதிரை தனித்தனியாகத் திமிர்கின்றன. எதுமுன் எது பின்? இதிலேயே நினைவு குழம்புகிறது.
இல்லையேல் மீண்டும் கன்னிக் குளத்துக்கு எப்போது வந்தேன்? கண்ணைக்கட்டி தட்டாமாலை சுற்றி வந்து விட்ட இடத்தில் கட்டை எடுத்துவிட்டால் போல் என்னைச் சுற்றி விழித்துத் திகைக்கிறேன். விட்ட இடத்தில் தொட்டாற்போல் வெள்ளைக் கூழாங்கல்லை உள்ளங்கையில் ஏந்தியபடி நிற்கிறேன்.
ஒ எங்கள் ரஹஸ்யம் ஆராயத் திரும்பவும் வந்திருக்கிறாயா? எல்லாம் புரிஞ்சு போச்சு நாங்கள்தான் பாக்கியாக்கும்! அவ்வளவு சுலபமா நாங்கள் புரிஞ்சுப்போமா? முதலில் என்னை எடுத்துக்கொள். நான் கிடந்த இடத்திலிருந்து என்னை இப்போது எடுத்தாய். ஆனால் நீ எடுக்கும்வரை நான் இருந்த இடத்தில் எத்தனை காலம் கிடந்திருப்பேன் என்று உன்னால் யூகிக்கவாவது முடியுமா? கேவலம் இந்தச் சம்பவம் நேர்வதற்குள் கடந்திருக்கும் காலம் உங்கள் கணக்கில் உன் வயதைப்போல் எத்தனை விழுங்கியிருக்கும், அறிவையோ? முன்செயல், பின்செயல், தற்செயல், செயல் வயதுகளின் கோடு அழிந்த நிலை உன்னால் நினைத்துப் பார்க்க முடியுமோ?
பிறக்கும்போதே சாகப் போகிறேன், சாகத்தான் சாவேன் எனச் சாகும் சித்தத்தில் உருவெடுப்பாய்ப் பிறக்கிறீர்கள். ஆதலால் வயதைப் பற்றியன்றி வேறு நினைப்பு உங்களுக்கு ஏது? சாகவும் தைரியமில்லை. பிறக்கவும் வெட்கமில்லை. இரண்டும் உங்களை விடவும்