உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 99


தின்னச் சொல்லுங்கோ. க ர க ர ன் னு பிஸ்கோத்து தோத்துடும். அத்தனையும் சத்து. எங்கே போயிட்டார் எங்காத்துப் பிராம்மணன்? சமயத்தில் காணாமல் போறதில் வரப்ரசாதி!”

கடைசி வார்த்தைகள் திடீரென கர்ஜனையில் உயர்ந்தன.

ஆனால் குருக்கள் எங்கேயும் போய்விடவில்லை. கையில் எண்ணெய்க் கிண்ணியுடன் திடீரெனச் சுவர் மூலையிலிருந்து முளைக்கிறார். மறுகையில், திடீரென எங்கிருந்தோ, செப்பிடுவித்தைபோல் ஒரு மணை தோன்றிற்று. குட்டி மணை.

என் தோளை மெதுவாய் அழுத்தி, மணைமேல்,என்னை அமர்த்தி, தலையில் எண்ணெயும் வைத்தாகி விட்டது. எல்லாம் அரை நிமிஷம்.

உடனே 'பரபர' தேய்ப்பில் மண்டை 'கிர்ர்ர்ர்'- தலை வயிற்றுள் போய்விட்டது.மண்டையுள் மத்துக் கடைந்தது.

கரடி மலையை விட்டபின் எண்ணெய் மறுபடியும் இப்போத்தான்.

கடியார முள்ளை இப்படியும் திருப்ப முடியுமோ?

எண்ணெய் ஸ்னானம் இந்தப் பக்கத்து விருந்தோம்பலின் இன்றியமையாத சடங்கு.

இத்தனை வருடங்களுக்குப்பின் இப்போது தேய்த்துக் கொள்வதால், எனக்கு என்னவானாலும் இதைத் தப்பு முடியாது.

அதிதி வாசற்படியேறி, திண்ணையில் உட்கார்ந்ததும், வீட்டுக்காரி ஏந்திவந்த தம்ளர் தண்ணீரை, உப்போ தித்திப்போ, தேவையோ இல்லையோ, குடித்தாக வேண்டும். பிறகுதான் கால் அலம்பவே உள்ளே அனுமதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/105&oldid=1130552" இலிருந்து மீள்விக்கப்பட்டது