அபிதா O 43
ஒருவன் மோதிக் கட்டிப் பிடிப்பதற்கு முன், கோதாவில் ஒருவரையொருவர் வளைய வருகிறோம்.
பரிசு?
அவன் அனுபவித்து அவனிடமிருந்து பறந்து போயாச்சு.
என் நெஞ்சுள் பறந்து தவிக்கிறது.
“இலை போட்டாச்சு!”
கணீரென அவன் மனைவியின் குரல் சமயத்தைக் கலைக்கிறது.
4
மத்தியான்னம் மாமா வீட்டுக்கு. கண்ணில் பட்டதெல்லாம் புதுமுகங்கள். எங்களைப் பார்த்து மிரள மிரள விழிக்கின்றன. நியாயம்தானே! பிள்ளைகளுக்கெல்லாம் பெண்டுகள் வந்துவிட்டார்கள். ஆளுக்கொரு குடும்பமாகப் பெருகிவிட்டது. வீடு, வீடா அது- 'ஜே ஜே'ன்னு இடைவிடாத இரைச்சல்.
மாமிதான்- அன்று கண்ட மேனிக்கு அழிவில்லை. சுக்கங்காயா வற்றி, சதாயுசுக்குக் குறைவற்றவளாகத் தோன்றுகிறாள். நெற்றிக்குங்குமம்தான் அழிந்து போயிற்றே அன்றி, தலையில் ஒரு மயிர்கூட நரைக்கவில்லை. நெற்றியில் ஒரு வரிகூட கோடவில்லை. சிலபேர் ராசி அப்படி, ஜலம் பாயப் பாய, கூழாங்கல் இன்னும் வழவழ-