பக்கம்:அபிதா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா O 57


கிறேனா? எரி நீரில் மூழ்குகிறேனா? இரண்டுக்கும் வித்யாசம் என்ன?

அவள் குரல் சொல்லும் கதை செவியில் பாய்கையில், மூடிய கண்களுக்குள் விழித்திரையில், கோலங்கள் நெய்த ஜமளக்காளத்தை விரித்துப் போட்டாற்போல் செத்தவள், உயிர் பெற்று எழுகிறாள்.

ம்ருதங்கத்தை ஸ்ருதி கூட்டுவது போன்று இவள் குரலின் தன்மையிலேயே ஒரு சிறு முனகல். உச்சரிப்பில் ஒரு மனமின்மை, சொல்லுக்குச் சொல், கொக்கி, ஒசைகளின் பிகுவை அவ்வப்போது இழுத்துத் தனக்குத்தானே தெரிந்து கொள்வதுபோல்.

"- அம்மா சதா சர்வகாலமும் அழுதுண்டேயிருப்பாளாம். வாய்விட்டு அல்ல. மோனக் கண்ணீர் வழிந்தபடியிருக்கும். காரணம் சொல்லமாட்டாள். கண்ணில் கோளாறோன்னு வைத்தியம், ஏவல், சூன்யமோன்னு யந்திரம் தந்திரம் வேப்பிலை, பூஜை- எல்லாம் பண்ணிப் பார்த்தாச்சு. உள்ளே ஏதோ உடைஞ்சு போச்சு. மருந்துக்குப் பிடிபடல்லே.

ஒரு சமயம் இல்லாட்டா ஒரு சமயம் அடக்கமுடியாத ஆத்திரத்தில் அடி உதைகூட- ஊகூம். கண்ணீர் நின்ற பாடில்லை. அதைப்பத்தி அழறவாளுக்கே அக்கறையில்லை. ஒரொரு சமயம் அம்மாவைப்பத்தி அப்படி நினைக்கையில் எனக்கே ஆத்திரம் வரது; கூடவே மனம் பரிதவிக்கறது.

தாத்தா சொல்வார்: ‘உன் அம்மா கண்ணீராவே கரைஞ்சு போயிட்டா’ன்னு.

தாத்தாவை நன்னா நினைவிருக்கு. திண்ணையில்தான் எப்பவும் வாசம். தாத்தாவுக்குக் கண் தெரியாது. தலையைத் தடவி என்னைத் தெரிஞ்சுப்பார். கதையெல்லாம் நல்லா சொல்வார். ‘இப்போ என் கைதான் அம்மா, என் கண்' என்பார், 'வாலுபோச்சு கத்தி வந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/63&oldid=1127251" இலிருந்து மீள்விக்கப்பட்டது