பக்கம்:அபிதா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அபிதா O 65

மலையிலிருந்து கபந்தமாய் ஒருகை நீண்டு என்னைத் தேடி வந்து என் இதயத்தை எட்டிப் பிடித்தாற்போல் இருந்தது. இதயம் 'சில்ல்ல்ல்-' உடல் ஒருமுறை உதறிற்று. குளிரில் ஒடுக்கிக் கொள்கிறேன்.

“என்ன பின்தங்கிட்டேள்? இருட்டிப் போச்சே! வாங்கோ!”

அவள் வெகுதுரம் முன் போய் விட்டாள். குரல் மட்டும் என்னை எட்டுகிறது. சக்கு குரல். அந்த அவசர விளிப்பின் பின் அதன் நிழல் வேறு பொருளில் உட்செவியில் தட்டுகிறது.

"நீ என்னைக் கைவிட்ட கதையை, நானே உன்னிடம் சொல்லத்தான், அபிதாவாய்த் திரும்பி வந்திருக்கிறேன். என்னைக் கொன்னாச்சு. அவளை என்ன செய்யப் போகிறாய்? என்னைப் பழி வாங்கிக்கத்தான் நான் அபிதா.”

என்னையறியாமலே ஒரு பெருங்கேவல் என்னின்று கிளம்பிற்று.

வாய்க்காலுக்கப்பால் ஊர் வெளிச்சம் மினுக்க ஆரம்பித்து விட்டது.


5

“அடாடா, எனக்கு இப்போத்தான் நினைப்பு வந்தது. சித்தி அவளாத்துக்குப் போயிட்டாளே! பக்கத்துக் கிராமத்தில் அவள் தம்பி 'டேரா' சினிமா நடத்தறார். படம் மாறும் போதெல்லாம், பையன் 'பாஸ்'

அ- 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/71&oldid=1127274" இலிருந்து மீள்விக்கப்பட்டது