பக்கம்:அபிதா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70 O லா. ச. ராமாமிருதம்

மற்ற அழுகையில் விழுந்து விடுகிறேன். மண்டையுள் நரம்புகள் தீய்கின்றன.

செவி, மூக்கு, கண்களில் ஆவி பறக்கிறது.
மன்னிப்பு கிடையாது.
உண்டு, உண்டு என்பது நம்பிக்கையானால்.
இல்லை, இல்லை என்பது உண்மை.
-ல்-
இ-நெற்றி-லை
யில்
இடது கையில் வலது கையில்
விண் விண்
மார்பில் ஆணி தெறித்தது.

சக்கு, என்னைச் சிலுவையில் ஏற்றிவிட்டாய்.

“சாப்பிட வரேளா?” -

உள்ளேயிருந்து அவள் குரல் கணீரென்று அழைத்தது.

பழைய நாள் திரும்பி வந்து விட்டது.

கூடத்தில் குத்துவிளக்கடியில் தையல் இலை போட்டிருக்கிறது.

அதில் ஈர்க்குத் தையல் பாதையாய் எவ்வளவு அழகாய் ஓடுகின்றது!

ரசம் புளித்தது.

சாதத்தைக் குழைத்து விட்டாள்.

கத்தரிக்காய் சரியாக வேகவில்லை.

“நன்னாயிருக்கா?”

நன்றாய்த்தானிருக்கிறது. நிஜமாவே, ரஸத்தைக் கையில் ஏந்தி சப்புகிறேன். அன்பிட்டவர்களின் குறைகளே, அவர்களிட்ட அன்பின் விசேஷ ருசி. எப்பவுமே பசிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/76&oldid=1130505" இலிருந்து மீள்விக்கப்பட்டது