பக்கம்:அபிதா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



72 O லா. ச. ராமாமிருதம்


தலில் சிலிர்த்துக் கொண்டு, எங்களுக்குப் புரியாது,தங்களுக்கே புரிந்த சடங்குக் கூத்தில் ஆடுகின்றன.

என்றும் எங்களுக்கு விடுதலையில்லாமல் எங்களைத் தங்களுடன் கவ்விக்கொண்ட எங்கள் நிழல்கள்.

மறுநாள் காலை, அபிதாவின் சித்தி வந்தாள். உடன் அவள் தம்பி- Tent சினிமா முதலாளி- வந்திருந்தான். அவனே 'ஸ்டார்’ மாதிரிதான் இருக்கிறான். பார்த்ததும் மனதை ஜிவ்வுவது அந்த எடுப்பான மூக்கும், கண்ணை மறைத்துக் கொண்டு முன் சரிந்த முரட்டு மயிரும், ஒழுங்காய் ஒதுக்கிய துளிர் மீசையின் செம்பட்டையும்தான்.

‘அபிதா, நீ ஏன் வரல்லே? உனக்குப் படம் பிடிச்சிருக்கும்’

சிலும்பலேயிலாது சுபாவத்திலேயே கனத்த வெண்கலக்குரல்.

“ஆமாம் உன் படத்தை நீதான் மெச்சிக்கணும். ஒரு பாட்டா, டான்ஸா, சண்டையா? உட்கார்ந்தது தெரியல்லே உடனே எழுந்துட்டமாதிரிதான் இருந்தது. படம் அவ்வளவு சுருக்க முடிஞ்சுடுத்து. கூட்டமேயில்லை. நாற்காலியில் ஈ ஙொய்ஞ்ஞ்”.........ராத்திரியே விட்ட சுருக்குக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால் இந்த வீட்டுக்குத்தான் எப்பவும் திரும்பிண்டு இருக்கோமே!”

“திரும்பறதுன்னாலே பின்னே என்ன அர்த்தம்? ஒரொரு சமயமும் ஒரு ஒரு இடம் திரும்பிண்டிருக்க முடியுமா? உங்களுக்கெல்லாம் ரயிலேறிப் போற மாதிரி விடிகாலை ஊர் சேரமாதிரி கணிசமா நாலுமணி நேரம் இருக்கணும். முனகினால் பாட்டு; தடுக்கி விழுந்தால் கும்கும், இடறிவிழுந்தால் அதுவே ஒரு டான்ஸ்- இதுவும் தான் எப்பவுமிருக்கே! கொஞ்சம் High class picture ஸார்- Cheap rentக்கு வந்தது இன்னிக்குப் பார்த்துண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/78&oldid=1127313" இலிருந்து மீள்விக்கப்பட்டது