76 0 லா. ச. ராமாமிருதம்
அபிதா ஒன்றும் பேசவில்லை. குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு கிளம்புகிறாள். அவள் கனவு இன்னும் கலையவில்லை. புன்னகை கன்னக்குழியில் தேங்கி விட்டது.
மௌனம் எவ்வளவு அற்புதமான அங்கி! நளினத்தில் டாக்கா மஸ்லின் அதனெதிர் என் செய்யும்? அதன் மடிகள் அவள் தோளினின்று விழுந்து, அவள் பின்னால் அவளைச் சூழ்ந்து, பூமியில் மௌனமாய்ப் புரள்கின்றன.
“பறிக்கும் வரை பழத்தை மரத்தில் யார் விட்டுவைக்றா? இந்த நாளில் பழத்தை மரத்தில் எவன் பார்த்தது? -எல்லாம் பிஞ்சுலே பழுத்த வெம்பல். இல்லை. தடியால் அடிச்சுக் கனிய வெச்ச பழுக்கல்கள். பழங்களே ஏது?” இங்கு வந்து இத்தனை நாழிக்குப்பின், இப்போத்தான் குருக்கள் இப்படி வாய் திறக்கிறார். .பரவாயில்லை. பேச்சில், நொண்டி குருக்கள் வாடை கொஞ்சம் இவரிடமும் அடிக்கும் போலிருக்கிறதே!
6
சாவித்ரியை ஊர்க் காரியங்களுக்கு மாமி விட மாட்டேன்கிறாள். “நன்னாயிருக்கு வந்த இடத்தில் நீங்கள் வேலை செய்யறது! நீங்கள் வந்து எங்களோடே தங்கியிருக்கிறதே எங்கள் பாக்கியம்.”
மாமி நன்றாகப் பேசுகிறாள். குரல்பெரிது. கூச்சமுமில்லை. நான் கூடத்திலிருக்கிறேன். சமையலறையிலிருந்து அவள் கர்ஜனை எட்டுகிறது. சிலபேருக்கு அவர்கள் குரலே அவர்கள் விளம்பரம், நாங்கள் இலவசத்துக்குத் தங்க