உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 79

பிரயத்தனங்கள் கொள்கிறோம். நினைவின் ரணமே உயிரின் தைரியம், உயிரோவியத்தின் பல வர்ணங்கள்.

காலடியில் குறுகுறு-

உடல் கூசி கையில் எடுக்கிறேன்.

புஷ்ப சரம்.

ஆ நினைவு வந்தது. இது நேற்று மாலை அபிதாவின் கூந்தலில் இருந்ததல்லவா?

“மாலையில் கூந்தலில் செருக்குடன் மகிழ்ந்த மலரே.

காலையில் உன்னை மண்ணில் சிதறுண்டு கிடக்கக் காண்பதென்ன?”

கன்னத்தில் ஒற்றிக் கொள்கிறேன். காதோடு அது மெத்தென்று என்ன பேசுகிறது?

உன் குரல் எங்கிருந்து வந்தாலும் சரி அது என் பாக்கியமே.

விசனம் நிறைந்த வசனங்கள். நெஞ்சின் அடிவாரத்தின் சுனையிலிருந்து பொங்குகின்றன. ஏதோ எல்லைக் கோட்டில் மனம் தத்தளித்துத் தவிக்கின்றது. என்னத்தையோ தேடி, இருப்புக்கொள்ளாமல், நடந்து கொண்டேயிருக்கின்றேன்.

முகத்தில் கடவுள் ஏன் கண்ணை எழுதி, காட்சியைக் காட்டி, கூடவே கலவரத்தையும் கொடுத்தான்?”

பாதையின் திருப்பத்தில், தூரத்தில் இரு கரையின் கோடுகளுக்கிடையே, ஒரு வளைந்த தாழ்வில், வாய்க்காலின் ஜலவிளிம்பு காலை வெய்யிலை வாங்கிக் கொண்டு தகதகக்கின்றது நெருங்குகிறேன். எதிர்க் கரையில் தோய்க்கிற கல்லருகே குத்திட்டபடி அபிதா குடத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறாள்.

புடவையின் கோடி, ஜலத்தில் நனைந்து நீரோட்டத்தில் லேசாய் அலைந்தது. புடவையின் உடலும் அங்கங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/85&oldid=1127347" இலிருந்து மீள்விக்கப்பட்டது