பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அபிராமி அந்தாதி



மால்அயன் தேட மறைதேட
வானவர் தேடநின்ற
காலையும் சூடகக் கையையும்
கொண்டு கதித்தகப்பு
வேலைவெங் காலன்என் மேல்விடும்
போது வெளிநில்கண்டாய்
பாலையும் தேனையும் பாசையும்
போலும் பணிமொழியே.

(உரை) பாலையும் தேனையும் வெல்லப் பாகையும் போன்ற இனிமையையுடைய மெல்லிய சொற்களைப் பேசும் தேவி, திருமாலும் அயனும் தேடவும், வேதம் தேடவும், தேவர் தேடவும் அவர்களுக்கு அரியனவாய் நின்ற நின் திருவடிகளையும், வளையலணிந்த திருக்கரங்களையும் தாங்கியபடி, மேல் எழுந்த மூன்று கிளைகளையுடைய வேலாகிய திரிசூலத்தைக் கொடிய யமன் என்மேல் விடும் அக்காலத்தில் என் முன்னே வெளிப்படையாக வந்து சேவை சாதித்தருள்வாயாக.

கப்பு-கிளை. சூலம் - யமன் ஆயுதம் ; “சூலம் பீடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவரும், காலன்” (கந்தர் அலங்காரம்).

86



மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத
நின்திரு மூர்த்திஎன்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற
தால்விழி யால்மதனை
அழிக்கும் தலைவர் அழியா
விரதத்தை அண்டம்எல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகம்கொண்
டாளும் பராபரையே.

(உரை) தம் நெற்றித் திருக்கண்ணால் மன்மதனை எரிக்கும் பரமேசுவரரது அழிவில்லாத தவ விரதத்தை