பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

அபிராமி அந்தாதி

அம்பிகையின் இயல்புகளுள் ஒன்றற்கு ஒன்று மாறாக இருப்பது போலத் தோன்றுவதைச் சமற்காரம்படக் கூறுகிறார். ஞாலமெல்லாம் பெற்றவளுக்கு நகில் தாழாமல் இருத்தல் ஒரு முரண்பாடு; “இங்கயற்கண் ணகனுலகம் எண்ணிறந்த சராசரங்க ளீன்றுந் தாழாக், கொங்கை" (திருவிளையாடல்.) கருணை விளைந்து முதிர்ந்த விழியில் இளம் பெண்ணிற்குரிய மருட்சியிருத்தல் முரண்பாடு. மான்கண்: 'மிருகாக்ஷி' (லலிதா. 561). இவ்விரண்டையும் ஒன்றாக்கி, 'நகையே இஃது' என்றார். முடிவு இல்-அந்தம் இல்லை. பிறவியில்லாதவளை மலைக்கு மகளாகப் பிறந்தாளெனல் முரண்பாடு.

93

விரும்பித் தொழும்அடி யார்விழி
நீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்த
மாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து மொழிதடு
மாறிமுன் சொன்னவெல்லாம்
தரும்பித்தர் ஆவரென் றால்அபி
ராமி சமயம் நன்றே.

(உரை) தன்னை விரும்பிப் பணியும் அடியார்கள், கண்களில் நீர் மல்க உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிய ஆனந்தம், மேன்மேலும் பொங்க ஆன்ம போதத்தை இழந்து தேனுள் மயங்கிய வண்டுபோல மயங்கி வார்த்தை குழறி முன்னே தாம் நினையாது சொன்னவையும் பொருளுடையனவாகத் தரும் பித்தராவரென்றால், அவர் கடைப்பிடிக்கும் அபிராமிக்குரிய சமயம் நன்மையை உடையது.

விழிநீர் மல்குதல் முதலியவை அம்பிகையின் அடியார்கள்பால் உண்டாகும் மெய்ப்பாடுகள். இந்தச் சிவானந்தாநுபவத்தை, “புளகமெய் போர்ப்ப மொழிதடு மாற, உள்ளொலி நாதப் புள்ளொலி முழங்க, ஞானவா ரமுத