பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

83

பானம தார்ந்து, கருவிகள் கழன்று பரவச மாகிப், பரமானந்தப் பரவையுட் படிந்து, பேரா இயற்கை பெற்றினிதிருப்ப, ஆரா வின்ப மளித்தரு ளெமக்கே" (பண்டார மும்மணிக்கோவை) என்னும் அருமைச் செய்யுட் பகுதி விளக்குதல் காண்க. உண்மைச் சிவயோகிகள் மறந்து கூறினவும் பலிக்குமாதலின், 'சொன்ன வெல்லாம் தரும்' என்றார். இதுபற்றியே அவர்களைச் சத்திய சங்கற்பர்கள் என்பர்.

94.

நன்றே வருகினும் தீதே
விளைகினும் நான் அறிவ
தொன்றேயும் இல்லை உனக்கே
பரம்எனக் குள்ளவெல்லாம்
அன்றே உனதென் றளித்துவிட்
டேன் அழி யாதகுணக்
குன்றே அருட்கட லேஇம
வான்பெற்ற கோமளமே.

(உரை) என்றும் அழிவற்ற குணமலையே, கருணா சமுத்திரமே, பருவதராசன் பெற்ற மெல்லியலே, நன்மையே வந்தாலும் தீமையே விளைந்தாலும் அவற்றைக் குறித்து நான் நினைப்பது ஒன்றும் இல்லை; என்னைப்பற்றி வருவதெல்லாம் உனக்கே பாரம்; எனக்கு உள்ள உடல் பொருள் ஆவி எல்லாம் என்னை நீ ஆட்கொண்ட அன்றே உன்னுடைய பொருளென்று அர்ப்பணம் செய்துவிட்டேன்.

நன்று-இன்பம்; தீது-துன்பம். உனது: தொகுதி ஒருமை, "அன்றே யென்ற னாவியும் உடலு முடைமையெல் லாமும், குன்றே யனையாய் என்னையாட் கொண்டபோதே கொண்டிலையோ, இன்றோ ரிடையூ றெனக்குண்டோ எண்டோண் முக்க ணெம்மானே, நன்றே செய்வாய் பிழை