பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

85

(உரை) சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், இந்திரன், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன், புராரி, திருமால், அகத்தியர், மோதிப் போர் செய்கின்ற வேற் படையையுடைய முருகன், விநாயகர், மன்மதன் முதலாகப் புண்ணியச் செயல்களைச் சாதனை செய்தவர்களாகிய கணக்கில்லாத பேர்கள் பாலாம்பிகையாகிய அமிராமியை வழிபடுவர்.

தையல்-அலங்காரம் உடையவள் எனலுமாம்.

97

தைவந்து நின்அடித் தாமரை
சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும் தலைவந்த
ஆறும் கரந்ததெங்கே
மெய்வந்த நெஞ்சின்அல் லால்ஒரு
காலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகல்அறி
யாமடப் பூங்குயிலே.

(உரை) உண்மை உணர்வு. பொருந்திய அடியார்களது மனத்திலன்றி வஞ்சகருடைய பொய் நிரம்பிய மனத்தில் ஒருகாலும் புகுதலை அறியாத இளமையையுடைய பொலிவு பெற்ற குயில்போலும் தேவி, நின் ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நின் திருவடித் தாமரையை வருடி, அதனால் ஊடல் தீராமை உணர்ந்து பின் அத்தாமரையைத் தம் திருமுடிமேற் சூட்டிக்கொண்ட சிவபிரானுக்கு அக்காலத்தில் அவர் திருக்கரத்தில் இருந்த அக்கினியும், திருமுடியில் இருந்த கங்கையும் மறைந்து போனது எவ்விடத்தில்?

சிவபிரான் அம்பிகையின் ஊடல் தீர்க்க வணங்குதல்: 11, 35, 60. அடியை வருடும்போது கையில் தீ இருப்பின் தாமரை போன்ற அதற்கு வெம்மை தந்து ஊடலை மிகுவிக்கும்; அங்ஙனமே, பணியுங்கால் கங்கை இருப்பின்