பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

87

நகிலையுடைய கொடி போன்ற அபிராமியினுடைய மூங்கிலைப் பொருது வென்ற அழகிய நீண்ட திருத்தோள்களும், கரும்பாகிய வில்லும், ஆண் பெண்கள் ஒருவரை ஒருவர் விரும்பும்படி பொரும் வலிமையையுடைய தேனையுடைய அழகிய மலரம்புகளும், வெள்ளிய புன்முறுவலும், மான் கண்ணை வென்ற திருவிழியும் அடியேனது நெஞ்சில் எக் காலத்தும் தோன்றிக்கொண்டிருக்கின்றன.

மன்மதன் கையில் உள்ள மலரம்புகள் அம்பிகை வழங்கியனவே. அந்த அம்புகளின் இயல்பை எண்ணிக் கூறினார். தார் குழையும்படி தழுவுதல்: "முகைவாய்த்த, முலைபாயக் குழைந்தநின்றார்" (கலித்தொகை, 68: 14.) கழை-கரும்பும் ஆம்.

100
பயன்

ஆத்தாளை எங்கள் அபிராம
வல்லியை அண்டம்எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்
தாளைப் புவி அடங்கக்
காத்தாளை அங்குச பாசம்
குசுமம் கரும்பும்அங்கை
சேர்த்தாளை முக்கண்ணி யைத்தொழு
வார்க்கொரு தீங்கில்லையே.

(உரை) எங்கள் தாயை, அபிராமவல்லியை, அகிலாண்டங்களையும்

ஈன்றருளியவளை, மாதுளம் பூவைப் போன்ற செங்நிறம் பொருந்தியவளை, புவிமுழுவதும் பாதுகாத்தவளை, அங்குசமும் பாசமும் மலர்ப்பாணமும் கரும்பு வில்லும் தன் நான்கு அழகிய திருக்கைகளிலே வைத்தவளை, மூன்று கண்களை உடையவளை வணங்கும் அடியவர்களுக்கு வருவது ஒரு துன்பமும் இல்லை.

அபிராமி—8