பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அபிராமி அந்தாதி

ஆத்தாள்: "ஆத்தாள் மால் தங்கைச்சி” (திருப்புகழ்). அண்டமெல்லாம் பூத்தாள், காத்தாள்: 13. மாதுளம் பூ நிறத்தாள்: 1. அடங்க-முழுவதும். 'அங்குச பாசாங் குசமும் கரும்பும்' என்ற பாடத்தில் அங்குசம் இரண்டு முறை வருகிறது. அம்பிகையின் திருக்கரங்கள் நான்கிலும் உள்ள பொருள்களைச் சொல்ல வந்தவர் மலர்ப் பாணத்தைச் சொல்லாது விட்டாரென்று கொள்ளுதல் பொருத்தமன்று; ஆகவே, இங்குள்ள பாடம் ஊகித்து அறியப்பட்டது. "அங்கையிற் பாசாங் குசமுங் கருப்பு வில்லும் சேர்த்தாளை" என்பது ஒரு புதிய பாடம். அந்தப் பாடத்திலும் மலரம்புகள் இல்லை. ஆதலின் ஊகித்த பாடமே சிறந்ததாகத் தோன்றுகிறது.