பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxi

கூடி முறை முறையே தேவியின் பரமாகம பத்ததியைப் பன்னியவர். அவர்கள் பின்னே திரிந்து அவர்களைப் பேணுவதற்குப் பூர்வஜன்மங்களில் தவம் செய்திருக்க வேண்டும்; 'முன்னே. தவங்கள் முயன்று கொண்டேன்' என்று இவர் பெருமிதம் அடைகிறார். அவ்வடியார் பெருமையை எண்ணாதவர்கள் நரகுக்கு உறயாகியவர்களென்று கருதி அவர்களை நண்ணாதவர் இவர். குடில் தொறும் பலிக்கு உழலுகின்றவர்களைப் பார்க்கும்போதெல்லாம், "ஐயோ! இவர்கள் அம்பிகையை மாத்திரைப்போதுகூடமனத்தில் நினையாதவர்கள் போலும்"! என்று இரங்குபவர். பழிக்கே சுழன்று வெம்பாவங்களை செய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர் கூட்டத்தை விரும்பாதவர்.

வாக்கு, மனம், காயம் என்னும் மூன்றினாலும் அம்பிகையைப் பக்தி பண்ணி இன்புற்ற பெரியார் இவர், அம்பிகையின் திருக்கோலத்தையன்றி மற்றவற்றை நெஞ்சில் இருத்தாதவர். உருகி அம்பிகையின் பாதத்திலே மனத்தைச் செலுத்தியவர். பலிபெறும் துர்த்தேவதைகளைத் தாம் பூசிப்பதாகப் பிறர் கூறுவதைக் கேட்டவராதலின் தம் நிலையை இவர் ஒரு பாட்டில் வெளிப்படுத்தி யிருக்கிறார்.

"வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சியன்றிப் பேணேன்...” (64)

'இறைவியின் புகழைப் பாடவும் நாமம் கற்கவும் பக்தி பண்ணவும் நான் என்ன புண்ணிபம் செய்தேன்! என்று பூரிக்கின்றார். அம்பிகையின் சீறடி சென்னி வைக்க ஒரு பெரிய தவம் எங்களுக்குக் கிடைத்ததே என்ன ஆச்சரியம்!' என்று வியக்கின்றார். கன்னியைக் காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணம்