பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxii

முன்செய்த புண்ணியம் அன்றோ?' என்று உவகை பூக்கிறார்.

"அம்மையே, நான் நடுக்கடலுள் சென்று விழுந்தாலும் கரையேற்றுகை நின் திருவுள்ளம், நான் மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்று. உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால் பாமாலை கொண்டு சென்று பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாயே; இது நின் அருளுக்கு அடுக்குமா? பரமென்று உன்னை அடைந்துவிட்டேன்; ஆகையால் பக்தருக்குள் தரம் அன்று என்று என்னைத் தள்ளத்தகாது; என் ஆவி தவிர் விலதாகிய கதியை அடையும் வண்ணம் கருதியருள வேண்டும். அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஆண்டுகொள்வாயாக. அதன் பொருட்டு நான் நின்று ஏத்துகின்றேன். இனி யான் பிறந்தால் நின் குறையே அன்றி யார் குறை? காலன் நான் நடுங்கும்படி வந்து அழைக்கும் பொழுது நீ தரிசனம் தந்து அஞ்சலென்பாயாக!" என்று ஒரு நிலையில் மனமுருகி வேண்டுகிறார், இத்தேவி உபாசகர்.

தாம் அம்பிகையால் தடுத்தாட்கொள்ளப்பெற்ற செய்தியை மனமுருகி நினைக்கின்றார்.

"அன்றே தடுத்தென்னை யாண்டுகொண்டாய்" (30)

"ஆசைக் கடலில் அகப்பட் டருளற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லற் பட இருந் தேனைநின் பாதமென்னும்
பாசகமலந் தலைமேல வலியவைத் தாண்டுகொண்ட
நேசத்தை என்சொல்லுவேன்" (32)


தம்முடைய ஔவியத்தைத் தீர்த்து, பாசத் தொடரை அரித்து, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் அருட்புனலால் துடைத்து, ஆசையை அடங்கச் செய்து, வினையை ஓட்டி, பிறவியை உடைத்து, மறலிவருகின்ற வழியை மறிக்கச் செய்த அம்மையின் திருவருட் சிறப்பை எண்ணி எண்ணி வியக்கின்றார். அத் திருவருளே துணையாக இவர் அடைந்த ஆனந்தாநுப-