பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxvi

பொருள் ஆற்றலும் இதில் நிரம்ப அமைந்து கிடக்கின்றன. உண்மையான ஞானம் பெற்று அதனால் வரும் ஆனந்தாநுபவத்தை உடையவர்க்கன்றி இத்தகைய பொருட் சிறப்புடைய வாக்கு அமைதல் மிகவும் அருமை. அடிதோறும் ஆசிரியருடைய உயர்ந்த அநுபவநிலை கொப்புளித்துக் குமிழியிட்டு மணக்கின்றது. அந்த மணத்தை நுகரவைத்த ஆசிரியர் 'அபிராமி சமய'த்தை இதன் மூலமாக நமக்குக் காட்டுகிறார். நாம் உட்புகுந்து தெளிந்து பயன்பெறுவோமாக!