பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

9

ஒப்பற்ற வீட்டு நிலையை அடையும்படி திருவுள்ளம் கொண்டருள்வாயாக.

"மத்துறு தண்டயி ரிற்புலன் றீக்கது வக்கலங்கி, வித்துறு வேனை விடுதிகண்டாய்" (திருவாசகம்) என்பது இங்கே ஒப்பீடற்குரியது. மூவரும் பணிதல்: "நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும், அயனும் பரவும் அபிராமவல்லி", "முதற்றேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே" (74, 92). சிந்துரானனம்: சிந்தூர திலகாஞ்சிதா (லலிதா. 632).

7

சுந்தரி எந்தை துணைவிஎன்
பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தி
னாள்மகி டன்தலைமேல்
அந்தரி நீலி அழியாத
கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத் தாள்மலர்த்
தாள் என் கருத்தனவே.

(உரை) சுந்தரி, எந்தையாகிய சிவபெருமானுக்குரிய தேவி, என்னுடைய பாசமாகிய தளைகளையெல்லாம் அடியேன்பால் எழுந்தருளி வந்து அழிக்கும் சிந்துர நிறம் பொருந்தியவள். மகிஷாசுரனது. சிரத்தின்மேல் நிற்கும் அந்தரி, நீல நிறத்தை உடையவள், என்றும் அழிவில்லாத கன்னிகை, பிரமதேவனது கபாலத்தைத் தாங்குகின்ற திருக்கரத்தை உடையவள் ஆகிய அபிராமியின் தாமரை மலரைப் போன்ற திருத்தாள்கள் என் உள்ளத்துள்ளே என்றும் எழுந்தருளி யிருப்பனவாம்.

யான் புன்னெறிபற்றி ஒழுகாமிற்க என்பால் பேரருள் பூண்டு தானே வலியவந்து ஆண்டுகொண்டாள் என்பார். 'வந்து அரி சிந்துர வண்ணத்தினாள்' என்று கூறினார். சிந்துர . வண்ணம்: 1; 6. மகிடன் தலை மேல் நின்ற கோலத்தில்