பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

11

தனபாரம் கண்ணன: "தார்கொண்ட மதிமுடி யொருத்தன் றிருக்கண்மலர் சாத்தக் கிளர்ந்து பொங்கித் தவழுமிள வெயிலுமழ நிலவுமள வளவலாற் றண்ணென்று வெச்சென்றுபொன், வார்கொண் டணந்தமுலை மலைவல்லி" (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், 1), ஊட்டாமல் கிண்ணத்திற் கறந்து அருத்தினமையின் நல்கின என்றார்.

ஆரம்-சகசிரதாரை என்னும் முத்துமாலை (தக்கயாகப் பரணி, 106, உரை.). முருந்து என்பது எதுகை நோக்கி முருத்தென வலித்தது. “அணிவது வெண் முத்து மாலை", "முத்து வடங்கொண்ட கொங்கை", “பென்னம் பெரிய முலையுமுத் தாரமும்", "முலைமேன் முத்து மாலை யுமே", (37, 42, 53, 85) என்பர் பின்.

9

நின்றும் இருந்தும் கிடந்தும்
நடந்தும் நினைப்ப துன்னை
என்றும் வணங்குவ துன்மலர்த்
தாள்எழு தாமறையின்
ஒன்றும் அரும்பொரு ளேஅரு
ளேஉமை யேஇமயத்
தன்றும் பிறந்தவளே அழி
யாமுத்தி ஆனந்தமே.

(உரை) எழுதாமல் கேட்கப்படுகின்ற வேதத்திற் பொருந்தும் அரிய பொருளாயுள்ளாய். சிவபிரானது திருவருள் வடிவே, உமாதேவியே, அன்று இமாசலத்தில் அவதரித்தாய், அழியாத முத்தியின்பமாக உள்ளாய், அடியேன் நின்றபடியும் இருந்தபடியும் படுத்தபடியும் நடந்த படியும் தியானம் செய்வது உன்னையே! என்றைக்கும் வழிபடுவது நின்றன் திருவடித் தாமரையையே.

"நின்று மிருந்துங் கிடந்தும் நினைமின்கள், என்றுஞ் சிவன்றா ளிணை" என்பதை முதலடி நினைப்பிக்கின்றது. மறைப்பொருள்: “மறையாய் மறைப் பொருளாய்ப்