பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அபிராமி அந்தாதி

தேவர்களுக்குரிய வானுலகத்தை ஆளும் செல்வத்தையும் என்றும் அழியாத மோட்சமாகிய வீட்டையுமன்றோ பெறுவார்கள்?

இம்மை மறுமை வீடு என்னும் மூன்று பயனும் பெறுவர் என்றபடி; “அறந்தழுவும் நெறிநின்றோர்க் கிகம்போகம் வீடளிக்கும் அம்மை” (திருவிளையாடல், 4 : 20).

இறைவியின் தண்ணளிக்கென்று தவம் செய்தாலும் அத்தவம் இப்பயன்களையும் கூட்டு விக்கும். தண்ணளி விளையுமாறு இப்படியாயிற்று. மதிவானவர் விண்-யாவரும் போகத்திற் சிறந்ததென்று மதிக்கும் தேவலோகம். அழியா முத்தியென்றமையின் ஏனையவை இரண்டும் அழியுமென்பது குறிப்பால் புலப்பட்டது. பண் அளிக்கும்: அளிக்கும், உவமவாசகம்; தன் இனிமையால் பண்களைப் பாதுகாக்கும் எனலுமாம். பரிமளம்: 28, 48; "திவ்ய கந்தாட்யா" (லலிதா. 631). யாமளை - சியாமள நிறத்தை உடையவள்; அஃது. ஒருவகைப் பச்சை நிறம்.

15

கிளியே கிளைஞர் மனத்தே
கிடந்து கிளர்ந்தொளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கிட
மேஎண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளிமுதல் பூதங்கள்
ஆகி விரிந்தஅம்மே
அளியேன் அறிவள விற்கள
வான ததிசயமே.

(உரை) கிளி போன்ற திருமேனியையுடைய தேவி, உறவினராகிய அன்பர்கள் மனத்தே நிலைபெற்று ஒரு காலைக்கு ஒருகால் விளங்கித் தோன்றும் ஞான ஒளியே, விளங்குகின்ற ஒளிகளுக்கெல்லாம் ஆதாரப் பொருளே, எண்ணிப் பார்க்கும் போது எந்தத் தத்துவமும் ஆகாமல் எல்லாம் கடந்து நின்ற பரவெளியே, ஆகாசம் முதலிய