பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

19தெளிநின்ற ஞானம் திகழ்கின்ற
தென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும்
மேவி உறைபவளே.

(உரை) தேசு நிறைந்து நிற்கும் நவகோணத்தைப் பொருந்தி விரும்பித் தங்கும் அபிராமியே, வெளிப்படையாக அடியேனும் காணும்படி நின்ற நின்றன் திவ்வியத் திருமேனியைப் புறத்தே கண்டு கண்களிலும், அகத்தே கண்டு கெஞ்சத்திலும் மகிழ்ச்சி நிலை பெற்றதனால் உண்டான இன்ப வெள்ளத்துக்குக் கரை காண முடியவில்லை; அடியேனது உள்ளத்துள்ளே, தெளிந்து நின்ற மெய்ஞ் - ஞானம் விளங்குகின்றது. இவ்வளவு பேரருளைச் செய்தற்குக் காரணம் எத்தகைய திருவுள்ளக் குறிப்போ?

பார்த்தல், முகக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்தல்; முகக்கண்ணால் பார்ப்பது இறைவியின் படிமத்தை. திருமேனி-விக்கிரகம். கரை-எல்லை; முடிவுமாம். கோணங்கள் ஒன்பது: தேவிக்குரிய நவகோணங்கள்; "வீற்றிருப்பாணவ கோணத்திலே” (வராகிமாலை, 31). இவை ஸ்ரீ சக்கரத்தில் உள்ளவை.

19

உறைகின்ற நின் திருக் கோயில்நின்
கேள்வர் ஒருபக்கமோ
அறைகின்ற நான்மறை யின்அடி
யோமுடி யோஅமுதம்
நிறைகின்ற வெண்திங்க ளோகஞ்ச
மோஎன்றன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதி யோபூர
ணாசல மங்கலையே.

(உரை) அருளால் நிறைவு பெற்ற நிச்சலையாகிய நித்தியமங்கலையே, நீ வாசஞ் செய்கின்ற ஆலயம் நின் பதியாகிய பரமசிவத்தின் ஒரு பக்கமோ, அல்லது நின்