பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அபிராமி அந்தாதி

புகழை எப்பொழுதும் சொல்கின்ற நான்கு வேதங்களின் மூலமோ, அன்றி அவற்றின் முடியாகிய உபநிடதங்களோ, அமுதம் நிறைந்திருக்கும் வெள்ளிய சந்திரனோ, வெண்டாமரையோ, அடியேனுடைய உள்ளமோ, தன்பால் வீழும் பொருள்கள் எல்லாம் மறைவதற்குக் காரணமான கடலோ? யாதாகும்?

ஒரு பக்கம்: “ஒரு பக்கமாய பரம்பரன், தேவி" (தக்கயாகப் பரணி, 245). நான்மறையின் அடிமுடி: "சுருதிகளின் கொழுந்தும் பதிகொண்ட வேரும்" (2). சந்திரன், தேவி வீற்றிருக்கும் இடங்களுள் ஒன்று; "மதிமண்டலத்தமுதமய மாயம்மை தோன்றுகின்றதும்" (மீனாட்சி. ஊசல், 2), சந்த்ர மண்டலமத்யகா (240) என்பது தேவியின் திருநாமங்களுள் ஒன்று (34,47.) வெண்மையைக் கஞ்சத்திற்கும் கூட்டுக. வாரிதி-பாற்கடல் (35). அம்பிகையே கலைமகளாகவும் திருமகளாகவும் விளங்குபவள் என்றபடி. அசல மங்கலை - பார்வதியெனலுமாம்.

20

மங்கலை செங்கல சம்முலை
யாள் மலை யாள்வருணச்
சங்கலை செங்கைச் சகல
கலாமயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடை
யோன் புடை ஆளுடையாள்
பிங்கலை நீலிசெய் யாள்வெளி
யாள் பசும் பெண்கொடியே.

(உரை) நித்திய மங்கலையாகிய அபிராமி தேவி, சிவந்த கலசத்தைப் போன்ற தனபாரங்களை உடையவள்! மலைமகள்; நிறம்பெற்ற சங்காலாகிய வளைகள் அசைகின்ற சிவந்த திருக்கரங்களையுடைய, எல்லாக் கலைக்கும் தலைவியாகிய மயில் போன்றவள்; பாய்கின்ற கங்கையின் மேலெழும் அலைகள் அடங்கித் தங்குதற்குரிய புரிந்த - சடையையுடைய சிவபிரானது வாம பாகத்தை ஆட்-