பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

21

கொண்டவள்; பொன் நிறம் படைத்த பிங்கலை: நீலநிறம் படைத்த காளி; செந்கிறம் பெற்ற லலிதாம்பிகை; வெண்ணிறம் பெற்ற வித்தியாதேவி; பச்சை நிறம் பெற்ற உமாதேவி.

மங்கலை முதல் ஆளுடையாள் வரையுள்ள இயல்பினளே பிங்கலை முதலியவளாக உள்ளாள் என்று முடிக்க.

மங்கலை-என்றும் சுமங்கலியாக இருப்பவள்; "சங்கரனார்மனை மங்கலமாம், அவளே” (44) என்பர் பின்; "மழு வார்திரு நெடுமங்கல மகளே" (தக்க. 321); சுமங்கலி (லலிதா, 967.) செங்கலசம் முலையாள்: விரித்தல் விகாரம். வருணச்சங்கு : வருணனாலே அளிக்கப்பெற்ற சங்கு எனலும் ஆம். எல்லாக் கலைக்கும் தலைவியாதலின் 'சகல கலா மயில்' என்றார்; 'சதுஷ்ஷஷ்டி கலாமயி', 'கலாவதி' (லலிதா, 236, 327) என்பன அம்பிகையின் திருநாமங்கள். கலா என்பது மயிற்கலாபத்துக்கு ஒரு பெயராதலின் அதனோடு சார்த்திச் சகலகலா மயிலென்று உருவகம் செய்தது ஒரு நயம் (96); "கலாமயிற் கூத்தயர்" (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்) என்ற வழக்கை ஒர்க. 'விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் மண்ணுக் கடங்காமல்' வந்தமையால், 'தாவுகங்கை பொங்கலை' என்றார். புரி——முறுக்கு. சடையோன் புடையாள், உடையாள் எனப் பிரித்தும் பொருள் கொள்ளலாம்.

அம்பிகை பஞ்ச வர்ணங்களையும் உடையவளென்று ஈற்றடியிற் கூறினார். பிங்கலை: ஸ்வாதிஷ்டானத்தில் ஆறிதழ்த் தாமரையில் அமர்ந்திருக்கும் காகினி என்னும் அம்பிகையின் திருக்கோலத் திருமேனி பொன்னிற முடையது; 'பீதவர்ணா' (லலிதா. 507); "ஆயி சுந்தரி நீலி பிங்கலை”, “குமாரி பிங்கலை” (திருப்புகழ்.)

நீலி; (8); மூலாதார சக்கரத்தில் ஐந்து முகத்தோடும் நான்கிதழ்த்தாமரையில் சாகினி என்ற திருநாமத்தோடும் கரிய நிறத்தோடும் எழுந்தருளியிருக்கும் அம்பிகையுமாம்.