பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv

யுடன் வெளியிட வேண்டுமென்ற தம் திருவுள்ளக் கருத்தைத் திருப்பனந்தாள், காசிமடத்துத் தலைவர்களாக இருந்த அமரர் ஸ்ரீலஸ்ரீ காசி வாசி அருணந்தி சுவாமிகளவர்கள் குறிப்பித்தார்கள். அவர்கள் திருவுள்ளக்கருத்தின்படி இந்நூல் 1944ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் குருபூசை நன்ளிைல் வெளியாயிற்று. பின்பு 1-4.48இல் இதன் இரண்டாம் பதிப்பு வெளியாயிற்று.

1958ஆம் ஆண்டில் மூன்றாம் பதிப்பு அமுதநிலைய வெளியீடாக வெளியாயிற்று. இது ஏழாம் பதிப்பு.

இதனை வெளியிட்டுக்கொள்ள இசைவு வழ்ங்கிய, திருப்பனந்தாள் காசி மடத்துத் தலைவர்களாகிய காசிவாசி சுவாமிகள்பால் மிக்க நன்றி பாராட்டுகிறேன். தம்ழ்க்கல்வி வள்ர்ச்சியின் பொருட்டும், சமய வளர்ச்சிக்கும் பிறிவன்க்யிலும் அவர்கள் செய்துவரும் நற்செயல்கள் பல.

'காந்தமலை'
இங்ஙனம்,

கி. வா. ஜகந்நாதன்
30.06.1977
கல்யாண்நகர்
சென்னை-18