பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அபிராமி அந்தாதி

நின்னுடைய அன்பர்களுடைய கூட்டத்தைப் பிரியேன், பரசமயங்களை விரும்பேன்.

உள்ளே, புறம்பே என்பன உள்ளும் புறமும் உள்ள பொருளே யென்னும் கருத்தையுடைய இடவாகு பெயர்கள். 'உள்ளத்தே விளைந்த கள்ளே, களிக்கும் களியே! "உருகி யுருகி நெக்கு நெக்குள் உடைந்து கசிந்திட் டசும் பூறும் உழுவ லன்பிற் பழவடியார் உள்ளத் தடத்தில்

ஊற்றெடுத்துப், பெருகு பரமா னந்தவெள்ளப் பெருக்கே". "விழித்துறங்குந் தொண்டர் உழுவலன் பென்புருகநெக் கள்ளூற வுள்ளே கசிந்தூறு பைந்தேறல்” (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்.) இச்செய்யுளோடு, "கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும், நள்ளே னினதடி யாரொடல் லால்நர கம்புகினும், எள்ளேன் றிருவரு ளாலேயிருக்கப் பெறினிறைவா, உள்ளேன் பிறதெய்வ முன்னை யல் லாதெங்கள் உத்தமனே” (திருவாசகம்) என்னும் மணி வாசகம் ஒப்புநோக்குதற்தரியது.

23

மணியே மணியின் ஒளியே
ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழ
கேஅணு காதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே
அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்ம
பாதம் பணிந்தபின்னே.

(உரை) மாணிக்கம் போன்றாய், அம் மாணிக்க மணியின் கண் உள்ள பிரகாசம் போன்றாய், விளங்குகின்ற மாணிக்கங்களால் அழகுபெறச் செய்யப்பெற்ற ஆபரணம் போன்றாய். நின் திருமேனியின்கண் அணியப்படுகின்ற மணிகளுக்கு அழகாயிருப்பாய், நின்னை அணுகாமல் வீணே பொழுது போக்குபவர்களுக்கு நோய்