பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

29

சித்தியும் சித்தி தரும் தெய்வம்
ஆகித் திகழும்பரா -
சத்தியும் சத்தி தழைக்கும்
சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும்வித்
தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியி னுள்ளே
புரக்கும் புரத்தையன்றே.

(உரை) அட்டமாசித்திகளும், அச்சித்திகளைத் தரும் தெய்வமாகி விளங்குகின்ற பராசக்தியும், சக்தியைத் தம்மிடத்தே தழைக்கச் செய்த பரமசிவமும், தவம் புரிவார் பெறும் மோக்ஷ ஆனந்தமும், அந்த முக்தியைப் பெறுவதற்கு அடியிடும் மூலமும், மூலமாகித் தோன்றி எழுந்த ஞானமும் ஆகிய எல்லாமாக இருப்பவள், அறிவினுக்குள்ளே நின்று பாதுகாக்கும் திரிபுரசுந்தரியே ஆகும்.

சித்தி - அணிமா, முதலிய அட்ட சித்திகள் : 'மகா சித்தி' (லலிதா. 225), சித்தி தரும் தெய்வம்-சித்தர்களுக்குச் சித்திகளை அருளும் கடவுள்; 'சித்தேசுவரி' (லலிதா 471) என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று. பராசக்தி (லலிதா, 572.) முத்தி: 10, குறிப்பைப் பார்க்க. புத்தி: மஹா புத்தி, மதி என்பன (223, 445) லலிதாம்பிகையின் திருநாமங்களாக வழங்குதல் இங்கே நினைத்தற்குரியது. புரத்தை: புரம் என்ற அடியாகப் பிறந்த பெண்பாற் பெயர். ஈண்டுப் புரமென்றது அம்பிகைக்குரிய திரிபுரத்தை.

29

அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்
டாய்கொண்ட தல்லஎன்கை
நன்றே உனக்கினி நான்என்
செயினும் நடுக்கடலுள்