பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அபிராமி அந்தாதி

பொலிந்து மதுரச் சொற்பொலி பழம்பாடல் சொல்லுகின்ற வளும்நின் சொரூபம்" (மீனாட்சி, ஊசல், 29); 'ஸரஸ்வதி' (லலிதா1 704). ஆகம்; திருமகளும் அம்பிகையுமே என்றபடி "திருவே" (3) என்றனர் முன்னும். மலரில் இருத்தல்: 20, 58, 80, 82, 89, 96, 99; 'பத்மாஸனா' (லலிதா. 278). இறைவி சூரியமண்டலத்தினிடையே இருப்பவள்; "சூழுஞ் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே" (47), 'பானு மண்டல மத்யஸ்தா' (லலிதா. 275). சந்திரமண்டலத்தினிடையே அம்பிகை வீற்றிருத்தல்: 20, குறிப்பு.

34

திங்கட் பகவின் மணம் நாறும்
சீறடி சென்னிவைக்க
எங்கட் கொருதவம் எய்திய
வாஎண் இறந்தவிண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்து
மோதரங் கக்கடலுள்
வெங்கட் பணி அணை மேல் துயில்
கூரும் விழுப்பொருளே.

(உரை) அலைகளையுடைய பாற்கடலில் வெவ்விய கண்ணையுடைய ஆதிசேடனாகிய பாயலின்மீது துயிலும் மேலான பொருளே, சிவபிரானது திருமுடியிலுள்ள பிறைச் சந்திரனது மணம் வீசும் நின்னுடைய சிறிய அடி, ஒன்றுக்கும் பற்றாத எங்கள் சிரத்திலே வைத்தருள எங்களுக்கு ஒப்பற்ற தவம் அமைந்தவாறு என்ன வியப்பு!கணக்கில்லாத பல தேவர்களுக்கும் இத்தகைய சிறந்த தவம் கிடைக்குமோ? கிடையாது.

திங்கட் பகவு - சந்திரனது கீற்று: பிறை. சிவபிரான் தேவியினது ஊடலைத் தீர்க்கும் பொருட்டு வணங்குங்கால் அவர் திருமுடிப்பிறை அம்பிகையின் திருவடியிற் பட்டு அவ்வடி திங்கட்பகவின் மணம் நாறியது; "சரணார விந்தம்...எம்பி ரான்முடிக் கண்ணியதே” (11) என்றார்