பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

35

முன்னும்; 60, 98-ஆம் செய்யுளைப் பார்க்க; "கூன் பிறைக்கோ டுழுத பொலன் சீறடி" (மீனாட்சி. முத்தம், 3), "பிறைநாறுஞ் சீறடியைப் பாடுவனே" (மீனாட்சி குறம், 45.); "பிள்ளைப் பிறைநாறுஞ் சீறடியெம் பேதாய்" (சிவகாமியம்மை இரட்டை மணிமாலை, 19); "தருணசந்த்ரரேகை விரவு மணநாறு பாதார விந்த விதரண விநோத மாதா" (சித்து வகுப்பு). அடி சென்னி வைக்கத் தவம்! 41. அம்பிகை. வைஷ்ணவியென்னும் பெயரோடு திருமாலை இடமாகக் கொண்டு தொழில் புரிபவளாதலின் ஆதிசேடன் மேல் துயில்பவளாகக் கூறினர்; "பொங்கமளிப் புணரித் துயில்வல்லி", "வலையவா ளராமீது துயில் விடாத தான்" (தக்க. 73, 111). துயிலென்றது யோக நித்திரையை.

35

பொருளே பொருள்முடிக் கும்போக
மேஅரும் போகம்செய்யும்
மருளே மருளில் வரும்தெரு
ளேஎன் மனத்துவஞ்சத்
திருள்ஏதும் இன்றி ஒளிவெளி
ஆகி இருக்கும் உன்றன்
அருள்ஏ தறிகின்றி லேன்அம்பு
யாதனத் தம்பிகையே.

(உரை) பல வகைச் செல்வமாக உள்ளாய். அச்செல்வத்தால் நிறைவேறும் போகமே, அரிய போகங்களைத் துய்க்கும்படி செய்யும் மாயாரூபியே. மயக்கத்தின் முடிவில் உண்டாகும் தெளிந்த ஞானமே, தாமரையாகிய இருக்கையில் எழுந்தருளிய தாயே, அடியேனது மனத்தில் மாயையிருள் சிறிதும் இல்லாது ஒழியச் சுடர் வீசும் பரா காசமாக இருக்கும் நின் திருவருள் எத்தகையதென்று அடியேன் அறியவில்லை.

ஐசுவரியத்தைத் தருபவளும் ஐசுவரியமே உருவமாக இருப்பவளும் தேவியே. போகமே 'மகாபோகா,