பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அபிராமி அந்தாதி

(லலிதா. 219). மருள் : 'மகாமாயா', 'மாயா'

(லலிதா; 225, 715), வஞ்சத்து இருள்: அத்து, அல்வழிச் சாரியை. அம்புயாதனத்தம்பிகை: 5, 20.

36

கைக்கே அணிவது கன்னலும்
பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து
மாலை விடஅரவின்
பைக்கே அணிவது பன்மணிக்
கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடை
யானிடம் சேர்பவளே.

(உரை) எட்டுத் திசையையே உடுத்த அழகிய உடை பயாக உடைய சிவபெருமானது வாமபாகத்தைப் பொருந்திய அபிராமி, தன் திருக்கரத்தில் அணிந்திருப்பன கரும்பாகிய வில்லும் மலராகிய அம்புகளும் ஆம்; செந்தாமரை போன்ற நிறமுடைய திருமேனியில் அணிவது வெள்ளிய முத்துமாலையாம்: விஷம் பொருந்திய நாகத்தின் படம் போன்ற குஹ்ய ஸ்தானத்தில் தரிப்பவை பல மணிகளால் . ஆகிய மேகலை வகைகளும் பட்டும் ஆம்.

கைக்கே அணிவது. பைக்கே அணிவது என்னும் இரண்டும் தொகுதி ஒருமைகள். சேர்வபளே என்பதை விளியாகக் கொண்டு முன்னிலைப்படுத்திப் பொருளுரைத்தலும் பொருந்தும், "ஆரமும் செங்கைச் சிலையு மம்பும்" (9) என்றார் முன்னும். பன்மணிக்கோவை யென்றது மேகலை, பருமம், காஞ்சி, கலாபம், விரிசிகை என்னும் ஆபரண வகைகளை. அம்பிகை இடையில் பட்டு அணிதல்:“ஒல்குசெம் பட்டுடை யாளை" (84); "சாத்துவன கோசி கமோ" (தக்க, 117); "த்ரிபுரை செம்பட்டுக் கட்டு நுசுப்பின் திரு" (திருப்புகழ்). திக்கேயணியும் திருவுடையான்-திகம்பரன்.

37